குத்தாலத்தில் வைகோவின் 80 ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு மதிமுக சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, September 22, 2024

குத்தாலத்தில் வைகோவின் 80 ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு மதிமுக சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது


மதிமுக தலைவர் வைகோவின் 80 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அவரது கட்சி நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் மதிமுக மாவட்ட இளைஞரணி சார்பில் சிறப்பு இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கொளஞ்சி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன் முகாமை துவக்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர்.  மேலும் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்று ரத்த மாதிரிகளில் தனித்தனியாக சேமித்து வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பேரூர் கழக செயலாளர் கருணாநிதி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment