• Breaking News

    வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி..... இந்தியா அபார வெற்றி.....


     வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடர்ந்து, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அஸ்வினும், ஜடேஜாவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களையும், ஜடேஜா 86 ரன்களையும் குவித்தனர்.

    இதையடுத்து களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் எடுத்த போது  2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.இந்திய வீரர் அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 82 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 6 விக்கெட்டும் ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    No comments