கும்மிடிப்பூண்டி: புதுவாயல் கிராமம் அருள்மிகு ஆனந்தவள்ளி சமேதஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி மற்றும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, September 15, 2024

கும்மிடிப்பூண்டி: புதுவாயல் கிராமம் அருள்மிகு ஆனந்தவள்ளி சமேதஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி மற்றும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது


 திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி வட்டம் புதுவாயல் அருள்மிகு அருள்மிகு ஆனந்தவள்ளி சமேதஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி மற்றும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆலயம்   புனரமைப்பு பணிகள்   பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.

இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.கடந்த 13 ம் தேதி சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து  கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர்.

இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.இதனையடுத்து அங்கு கூடியிருந்த   பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. புதுவாயல்    சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment