கம்பம் போக்குவரத்து காவல் துறை சார்பாக நவீன வசதிகளுடன் கட்டுப்பாட்டு அறை திறப்பு
தேனி மாவட்டம் கம்பம்-புதுப்பட்டி இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலை முன்பாக போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை விழிப்புணர்வு குறித்த வாசகங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர்கள் கார்த்திக்ராஜா, சக்கப்பன், புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன், போக்குவரத்து காவல் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments