கும்மிடிப்பூண்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஐசிஆர்டிசிஇ நிறுவனத் தலைவர் பாதிரியார் டாக்டர் எஸ்.சேவியர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். சைன் கம்யூனிட்டி கல்லூரி நிறுவனத் தலைவர் ஆரோன் வரவேற்றார்.
இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஆதித்தமிழர் விடுதலை இயக்க நிர்வாகி இளஞ்செழியன், கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ், பாஸ்டர் யாபேஸ், டாக்டர் வர்மா, டாக்டர் ஏஞ்சல், டாக்டர் சங்கீதா, பிர்லா கார்பன் நிறுவன மனிதவள அதிகாரிகள் பெர்னான்டஸ், ஷெரின், ஆடிட்டர் சுப்பிரமணியன், அரிமா சங்க நிர்வாகி அப்துல் அமித் அல்ஹஜ், தொழிலதிபர்கள் டேவிட் ராஜ், அமுத செல்வன் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய ஐசிஆர்டிசிஇ நிறுவனத் தலைவர் பாதிரியார் டாக்டர் எஸ்.சேவியர் அல்போன்ஸ் செவிலியர் படிப்பு படித்த மாணவ மாணவிகளின் எதிர்கால இலக்கு சேவையை முதன்மையாக கருதவேண்டும் என்கிற அடிப்படையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் ஷைன் கம்யூனிட்டி கல்லூரியின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு பதக்கம் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் 89 மாணவ மாணவிகளுக்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார், ஷைன் கம்யூனிட்டி கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆரோன் உள்ளிட்டோர் பட்டங்களை வழங்கினர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஷைன் அறக்கட்டளை நிர்வாகி அம்மு ஆரோன், ஷைன் அறக்கட்டளை உறுப்பினர் ஜெமிமா, கல்லூரி முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர் சரண்யா, மேலாளர் செபாஸ்டின், உள்ளிட்டோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.
No comments:
Post a Comment