பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டு கொலை - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 18, 2024

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டு கொலை

 


வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவர்களை தாக்க முயற்சி செய்துள்ளார். இதனால் போலீசார் தற்காப்புக்காக அவரை சுட்டனர். இதில் அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடைய உடல் சென்னை ஸ்டாண்ட்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை புளியந்தோப்பில் காக்கா பாலாஜி போலீஸாரால் என்கவுண்டரில்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் தமிழகத்தில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment