தேர்வு எழுத வந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் சோதனை..... முதலமைச்சர் அதிரடி உத்தரவு..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 18, 2024

தேர்வு எழுத வந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் சோதனை..... முதலமைச்சர் அதிரடி உத்தரவு.....

 


அசாம் மாநிலத்தில் நேற்றைய தினம் ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வு எழுத வந்த பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்புகளை பெண் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தேர்வு முடிந்ததும் தனக்கு நேர்ந்ததை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து நாங்களும் இதேபோன்று துயரங்களை அனுபவித்துள்ளோம் என்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் தங்கள் துயரங்களை பகிர்ந்துள்ளனர்.

இச்சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஷ்வா சர்மா தேர்வு எழுத வந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை பெண் காவலர் சோதனையிட்டது குறித்து விசாரணை நடத்த அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் எங்கள் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியம் மற்றும் சுயமரியாதை மிக முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment