தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 15, 2024

தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது


சென்னை அடுத்த தாம்பரம், SGS தனியார் மண்டபத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுசெயலாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வில் மக்களின் வரி பணத்தில் திறந்து மக்களிடமே அதிகம் கொள்ளை அடிக்கும் நோக்கில் கட்டணங்களை உயர்த்தி கொள்ளை அடிக்கும் திட்டம் என்றும், வருகின்ற 2026  சட்டமன்ற தேர்தலில் அதிமுக வை வெற்றி பெற வைக்க மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும் என்றும் பேரிடர் காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய ஒரு குழு அமைத்து அவர்களுக்கு உதவி புரிய வேண்டும் எனவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கபட்டன. 

இதில் மாநில துனை செயலாளர்கள் பகர்தீன்,சைபுள்ளா, பார்த்திபன், தாங்கள் தாரிக், மண்ணிவாக்கம் யூசுப், மாநில இளைஞர் அணி செயலாளர். ந. அன்வர் பாஷா,மாநில தொழிற்ச்சங்க துனை செயலாளர் அப்துல்சமது,  வழக்கறிஞர் அணி துணை செயலாளர் கபிர்,மாவட்ட பொருளாளர் அப்துல் லத்தீப், தாம்பரம் சையத்அலி, ஆலந்தூர் வீரபாண்டி உட்பட மணிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment