மெரினா அருகே போலீசாரை அர்ச்சனை செய்த ஜோடி கைது - MAKKAL NERAM

Breaking

Monday, October 21, 2024

மெரினா அருகே போலீசாரை அர்ச்சனை செய்த ஜோடி கைது

 


சென்னை மெரினா அருகே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டனர்.மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த  காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த ஜோடியிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதனால்  ஆத்திரமடைந்த இருவரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு காவல்துறையினரை ஒருமையில் பேசிய காரின் உரிமையாளர், தாம் மது அருந்தியுள்ளதாகவும், தமக்கு உதயநிதி ஸ்டாலினை தெரியும் எனவும் மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதுதொடர்பாக பணியில் இருந்த காவலர் சிலம்பரசன் ஜோடி மீது புகார் அளித்தார். இந்நிலையில் அந்த ஜோடியை போலீசார் கைது செய்தனர்.  வேளச்சேரி தனியார் விடுதியில் தங்கி இருந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழியை  தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment