டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழக அரசு - MAKKAL NERAM

Breaking

Monday, October 21, 2024

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழக அரசு

 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது .

 சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதன்மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment