சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Friday, October 25, 2024

சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது


ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஈரோடு மாவட்ட அலுவலர் முருகேசன் உத்தரவுப்படி சத்தியமங்கலம் தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் ரங்கராஜ் தலைமையில் சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை  எல்லைக்குட்பட்ட 1. சத்தியமங்கலம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி 2. சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி தொடக்கப்பள்ளி 3. சத்தியமங்கலம் விஸ்டம் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் 2024 ஆம் வருடம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது .

 இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள், நகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள், விஸ்டம் பள்ளி ஆசிரியர்,  ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment