ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல்...... காலிஸ்தான் எச்சரிக்கை...... - MAKKAL NERAM

Breaking

Monday, October 21, 2024

ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல்...... காலிஸ்தான் எச்சரிக்கை......

 


காலிஸ்தான் பிரிவினைவாதி குரபத்வந்த் சிங் பன்னு. இவர் தற்போது ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீக்கிய இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவு விழா அனுசரிக்கப்பட உள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் 19ஆம் தேதி வரை நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அன்றைய தினங்களில் ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பயணிக்க வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 அந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் யாரும் பயணிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.கடந்த வருடமும் இவர் இதே போன்று மிரட்டல் விடுத்திருந்தார். மேலும் சமீப காலமாக நாட்டில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் இதனால் விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது காலிஸ்தான் பிரிவினைவாதி விமானங்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment