சேலம்: உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தவெக கட்சியினர் கொடியுடன் அட்ராசிட்டி - MAKKAL NERAM

Breaking

Monday, October 21, 2024

சேலம்: உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தவெக கட்சியினர் கொடியுடன் அட்ராசிட்டி

 


சேலத்தின் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள நேரு அரங்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். துணை முதல்வராகி முதன்முறையாக சேலத்தில் வருகை புரிந்ததால், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதே சமயம், த.வெ.க கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர், இருசக்கர வாகனங்களில் வட்டமடித்து, கொடியை அசைத்து ஆரவாரத்துடன் துணை முதல்வரின் கான்வாயை நோக்கி சென்றனர். அவர்கள் ப்ரோட்டோகால் இல்லாமல் சம்பவ இடத்தில் சத்தமிட்டபடி சுற்றியதால், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சலசலப்பை ஏற்படுத்தியது. 

அவர்களின் இந்த நடவடிக்கையால், அரசியலுக்காகவே இதனை செய்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.இதைத் தொடர்ந்து காவல்துறை, த.வெ.க கட்சியினர் சம்பவ இடத்தில் அனுமதி இல்லாமல் சத்தமிட்டது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது, “துணை முதல்வரின் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் ப்ரோட்டோகால் அடிப்படையில் செய்யப்பட்டன. ஆனால் த.வெ.க கட்சியினர் அனுமதி பெறாமல் அரசியல் காரணமாகவே இத்தகைய செயலை செய்திருக்கலாம்” என்றனர்.

No comments:

Post a Comment