பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை திட்டம் இறுதிப் பணிஆரணி ஆற்றின் குறுக்கே ஆழ்துளை இயந்திரம் மூலம் குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம் - MAKKAL NERAM

Breaking

Monday, October 21, 2024

பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை திட்டம் இறுதிப் பணிஆரணி ஆற்றின் குறுக்கே ஆழ்துளை இயந்திரம் மூலம் குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம்


பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில்   10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 500 க்கும் மேற்பட்ட கடைகள் ஓட்டல்கள், நிறுவனங்கள் 10 திருமண மண்டபங்கள் 3  சினிமா தியேட்டர்கள் உள்ள நிலையில் 22 வார்டுகளுக்கு  பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 54.78 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

 கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும்  பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90சதவீதம் முடிவடைந்த நிலையில் பிரதான 5 நீரேற்று நிலையத்திலிருந்து கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆரணி ஆறு குறுக்கே உள்ளதால் ஆரணி ஆறு முழுவதும் தண்ணீர் நிரம்பி நிலையில் பள்ளங்கள் தோண்டி குழாய் பதிக்க முடியாத நிலையில் தொழில்நுட்ப உதவியுடன் ராட்சத துளையிடும் இயந்திரத்தின் மூலம் ஆரணி ஆற்றின் கரையில் இருந்து மறுகரை வரை 250 மீட்டர் நீளம் 10 மீட்டர் ஆழத்தில் துளையிடும் பணிகள் துவங்கப்பட்டன.

 இதன் பணிகள் ஒரு மாதம் வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இதனை பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் துவக்கி வைத்தார் இதில் துணைத் தலைவர் விஜயகுமார் நிர்வாக பொறியாளர் அமலதீபன், உதவி நிர்வாக பொறியாளர் சம்பத்குமார் உதவி பொறியாளர் தமிழ்மணி மேற்பார்வையாளர் குமார், வார்டு உறுப்பினர்கள் வசந்தாசெங்கல்வராயன், செந்தில்குமார்,பரிதா ஜெகன், பத்மா சீனிவாசன், சமூக ஆர்வலர் பாலச்சந்தர் உட்பட பலர் உடன் கொண்டனர்.

No comments:

Post a Comment