திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார் - MAKKAL NERAM

Breaking

Sunday, November 17, 2024

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்


திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தல் உள்ளிட்ட சிறப்பு முகாமை திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் பொன்னேரி நகராட்சி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்து புதிய வாக்காளர்களை சேர்க்க விண்ணப்பங்களை வழங்கினார்.

அப்போது நகர செயலாளர் செல்வகுமார் மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார் மீஞ்சூர் பேரூர் செயலாளர் பட்டாபிராமன் துணைச் செயலாளர் தமிழரசன் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஸ்ரீதர் இலுப்பாக்கம் ரவி, சத்தியமூர்த்தி முன்னாள் தலைவர் சங்கர் மீஞ்சூர் மாரி, திராவிடச் செல்வம் உள்ளிட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பாக முகவர்கள் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment