சென்னைக்கு அழைத்துவரப்பட்ட நடிகை கஸ்தூரி..... காவல் நிலையத்தில் தீவிர விசாரணை..... - MAKKAL NERAM

Breaking

Sunday, November 17, 2024

சென்னைக்கு அழைத்துவரப்பட்ட நடிகை கஸ்தூரி..... காவல் நிலையத்தில் தீவிர விசாரணை.....

 


நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மன் கொடுக்க சென்றபோது அவர் தலைமறை வாகிவிட்டார். பின்னர் அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய நீதிபதி இப்படி தெலுங்கர்கள் குறித்து கஸ்தூரி அவதூறாக பேசியதை ஏற்க முடியாது என்றார். 

இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது நீதிமன்றம்.இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை பிடிக்க இரு தனிப்படை போலீசார் அமைக்கப்பட்ட நிலையில் நேற்று அவரை ஹைதராபாத்தில் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது அவரை சென்னைக்கு அழைத்து வந்து விட்டனர். மேலும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு நடிகை கஸ்தூரி விசாரணைக்காக தற்போது அழைத்துவரப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment