மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு - MAKKAL NERAM

Breaking

Sunday, November 3, 2024

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு

 


மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் சுரேஷ் கோபி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நிலையில் வெற்றி பெற்று எம்பி ஆனார். இதைத்தொடர்ந்து அவரை ஆளும் பாஜக அரசு மத்திய மந்திரியாக பதவி கொடுத்தது. இந்நிலையில் தற்போது மத்திய மந்திரி சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதாவது சமீபத்தில் திருச்சூர் பூரம் ‌ விழாவிற்கு சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்றார். அவர் அரசு வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்ற சாட்டு எழுந்தது.‌ மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அதிகாலை 3 மணியளவில் நோயாளிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர் சென்ற நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment