1 மாதத்திற்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 18, 2024

1 மாதத்திற்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை

 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடைக் கோயிலில் ஒன்று. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 28-ந் தேதி கோயில் யானை தாக்கியதில் யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து யானை தெய்வானை, யானை மண்டபத்தில் வைத்து கால்நடைத்துறை மற்றும் வனத்துறையின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. 

இதனைத் தொடர்ந்து யானை இன்று நடை பயிற்சிக்காக வெளியே அழைத்து வரப்பட்டது.அப்போது கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் யானை மண்டபத்தில் வைத்து யானை தெய்வானைக்கு யாகம் மற்றும் கஜ பூஜை நடைபெற்றது. இதையடுத்து கோயில் விடுதிகள் வழியே சுமார் 500 மீட்டர் தூரம் வலம் வந்து மீண்டும் யானை மண்டபத்துக்குள் சென்றது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் கிரி பிரகாரத்தில் யானையை பார்த்த பக்தர்கள் அச்சமின்றி கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர். 30 நாட்களுக்கு பின்னர் மண்டபத்திலிருந்து வெளியே வந்ததால் யானை தெய்வானை மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டது.

No comments:

Post a Comment