அமித்ஷா டிசம்பர் 27 தமிழகம் வருகை..... கருப்புக் கொடி காட்ட காங்கிரஸ் திட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 25, 2024

அமித்ஷா டிசம்பர் 27 தமிழகம் வருகை..... கருப்புக் கொடி காட்ட காங்கிரஸ் திட்டம்

 


மத்திய அமைச்சர் அமித்ஷா வரும், 27ம் தேதி சென்னை வருகிறார். அன்று இரவு சென்னையில் தங்குகிறார். மறுநாள் திருவண்ணாமலை செல்கிறார்.அம்மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள, மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கட்சி அலுவலகங்களை திறக்கிறார்.இந்நிலையில் தமிழகம் வரும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment