3 நாள் தான் டைம்..... தனியார் பேருந்துகளை அலறவிட்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 4, 2024

3 நாள் தான் டைம்..... தனியார் பேருந்துகளை அலறவிட்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

 


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். அப்போது கோயம்புத்தூர் மாநகரில இயங்கும் 149 தனியார் பேருந்துகளில் 129 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல வெளியூர் செல்லும் 107 தனியார் பேருந்துகளிலும் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்தது. அதனை ஆய்வு செய்த கோவை மாநகர காவல் ஆணையர் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும். இன்னும் மூன்று நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி இருக்க வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment