மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக தடப் பெரும்பாக்கம் ஊராட்சியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 10, 2024

மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக தடப் பெரும்பாக்கம் ஊராட்சியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  பிறந்த நாளை முன்னிட்டு எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு வழங்கியும் உணவு வழங்கியும் புதிய கழகக் கொடியை ஏற்றியும் கொண்டாடப்பட்டது.

 இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி (எ) ராஜேஷ் மற்றும் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆ.ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் K.G பாஸ்கர் சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் திரு வெங்கடாசலபதி, மாநில அயலக அணி துணை செயலாளர் கணிகை ஜி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர், இந்நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஜானகிராமன், மாவட்ட பிரதிநிதி பா.து தமிழரசு., மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஜெ பாலச்சந்தர், கழக முன்னோடிகள் பாலசுப்ரமணியம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இரா சுரேஷ் குமார், வார்டு உறுப்பினர் நரேஷ் , ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ருக்கேஷ் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளான கலந்து கொண்டனர்.மேற்படி நிகழ்ச்சி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் உதயன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

No comments:

Post a Comment