பணத்தை சாலையில் பறக்கவிட்ட யூடியூபர்...... தட்டி தூக்கிய போலீஸ்..... - MAKKAL NERAM

Breaking

Thursday, December 19, 2024

பணத்தை சாலையில் பறக்கவிட்ட யூடியூபர்...... தட்டி தூக்கிய போலீஸ்.....


இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் சப்ஸ்க்ரைபர் வேண்டும் என்பதற்காகவும் அதிக லைக்குகள் வேண்டும் என்பதற்காகவும் பலர் வித்தியாச வித்தியாசமாக யோசித்து ஏதேனும் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த youtuber ஆன பாலுச்சந்தர் என்பவர் தனக்கு அதிக சப்ஸ்க்ரைபர் மற்றும் லைக்ஸ் வேண்டும் என்பதற்காக கட்டு கட்டாக பணத்தை சாலையில் வீசுவது போன்று காணொளியை வெளியிட்டு இருந்தார்.

இந்த காணொளி வைரலான நிலையில் மக்களுக்கு ஆசையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் காவல்துறையினரால் பாலுச்சந்தர் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment