திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீச்சு..... ஒருவரை அரிவாளால் சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள் - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 18, 2024

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீச்சு..... ஒருவரை அரிவாளால் சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்

 


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடியில் இரவு 11.30 மணியளவில் டூவீலரில் வந்த மர்ம நபர்கள், மைதீன் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மர்ம நபர்கள் வீட்டின் கதவை அரிவாளால் கொத்தியும், பெட்ரோல் குண்டை வீசியும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அதேபோல், வேலைக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிய மசூது என்பவரை அரிவாளால் தாக்கி உள்ளனர். தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் யார்? அவர்கள் பின்னணியில் இருப்பது யார்? எதற்காக தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment