செங்கல்பட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கைப்பந்து வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Monday, December 2, 2024

செங்கல்பட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கைப்பந்து வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ச.ராஜேஷ் சர்தார் அவர்களின் ஏற்ப்பாட்டில் தாம்பரம் மாநகரத்தில் உள்ள கிறிஸ்துவின் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக வருகின்ற ஐந்தாம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கும் மாநில அளவிளான கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, 4வது மண்டல குழு தலைவர் பகுதி கழக செயலாளர் டி.காமராஜ் இருவரும் இணைந்து 12 வீராங்கனைகளுக்கு ஜெர்சி, கிட்பேக், சூஸ் வாட்டர் பாட்டில், டவல் கைப்பந்து ஆகியவற்றை அவர்கள் தன் திருக்கரங்களால் வழங்கப்பட்டது. உடன் வட்ட செயலாளர் சீனிவாச குமார், கழக பேச்சாளர் முன்னாள் மாவட்ட பிரதிநிதி எஸ்ஜி.கருணாகர பாண்டியன், மாணவரணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment