யார் அந்த SIR.? அதிமுக ஒட்டிய அதிரடி போஸ்டர் - MAKKAL NERAM

Breaking

Sunday, December 29, 2024

யார் அந்த SIR.? அதிமுக ஒட்டிய அதிரடி போஸ்டர்


 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக வந்து விசாரணை நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு‌ எஃப்ஐஆர் கசிந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. 

இது தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போது ஒருவரிடம் போனில் பேசியதாகவும் பின்னர் அந்த சாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று மாணவியை மிரட்டியதாகவும் தகவல் வெளிவந்தது.

ஆனால் போலீஸ் கமிஷனர் அருண் ஞானசேகரன் செல்போன் அந்த சமயத்தில் ஏரோபிளேன் மோடில் இருந்ததாகவும் அதனால் சார் என்ற ஒருவர் இந்த வழக்கில் இல்லை எனவும் ஞானசேகரன் ஒருவன் மட்டுமே குற்றவாளி எனவும் கூறினார். இந்நிலையில் எதிர்கட்சிகள் தொடர்ந்து யார் அந்த சார் என்ற கேள்வி எழுப்பி வருவதோடு உண்மையை மறைக்க பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். 

குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அந்த சார் யார் என்று கேட்டு வரும் நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திமுக கட்சி நிர்வாகி என்று கூறுகிறார். அதன் பிறகு திமுக அழுத்தத்தால் யாரையோ காப்பாற்ற போலீசார் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதன் காரணமாக யார் அந்த சார் என்று கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி இருக்குமாறு அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதே போன்று அதிமுக ஆட்சியின் போதும் திமுக போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment