ஆரணி அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சௌடேஸ்வரி தேவி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, January 19, 2025

ஆரணி அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சௌடேஸ்வரி தேவி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

 


 திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சௌடேஸ்வரி தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 1ஆம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.தொடர்ந்து கோ பூஜை,கணபதி ஹோமம்,யாகசாலை பூஜை,உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விசேஷ சாந்தி,இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், விழாவின் முக்கிய நாளான இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள், முழங்க ராஜகோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கும், விமான கோபுரங்களுக்கும், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதனை அடுத்து அங்கு கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 

முன்னதாக அதிகாலை முதல் மூலவருக்கு பால்,தயிர்,சந்தனம், இளநீர்,ஜவ்வாது,தேன்,உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல்  சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment