சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 சவரன் நகை திருட்டு..... போலீசார் விசாரணை - MAKKAL NERAM

Breaking

Friday, January 10, 2025

சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 சவரன் நகை திருட்டு..... போலீசார் விசாரணை

 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மங்கைமடம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை செய்கிறார். கடந்த திங்கட்கிழமை தனது மகளின் பிரசவத்திற்காக மயிலாடுதுறைக்கு சென்ற செல்வேந்திரன் இன்று அதிகாலை வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய செல்வேந்திரனிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய வீட்டின் பின்பக்க கதவானது உடைந்த நிலையில் இருந்தது. உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு அனைத்து பொருட்களும் ஆங்காங்கே சிதரிக்கிடந்தன.மேலும், பீரோவில் வைத்திருந்த 125 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment