மயிலாடுதுறையில் 50 நடன கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல் - MAKKAL NERAM

Breaking

Saturday, January 11, 2025

மயிலாடுதுறையில் 50 நடன கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

 



மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்று ஊடக மைய அனைத்து கலைகளின் கூட்டமைப்பு இசை நாடக நடனக்கலைஞர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட  சங்கம்  மற்றும் பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு   வெல்லம், அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், மற்றும் 2025ம் ஆண்டிற்கான நாள்காட்டி அடங்கிய பொங்கல் பரிசுப்பை வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாற்று ஊடகம் மையத்தின்  மாவட்ட தலைவர் திருமாவளவன்  முன்னிலையில்,மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட சங்கம் மற்றும் பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை சார்பில் நிர்வாகி வள்ளாலகரம் ஆர்.ஆர். பாபு தலைமையில்,  அறக்கட்டளை ஆலோசகர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், சிறப்புரையாற்றினார்.

  ஜி எம். அறக்கட்டளை நிர்வாகி முனைவர். ஜி எம். பத்மா,பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்எம்எஸ்.நாராயணன்,  சிவகுமார், முகமது இக்பால், வீரா ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசுகளை கலைஞர்களுக்கு வழங்கினார்கள். நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்காக தொடர்ந்து அரசிடமிருந்து பல்வேறு சலுகைகள் நலத்திட்டங்களை அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பது, சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் நாடகங்கள் ஆகியவற்றை தயாரித்து வழங்குவது உள்ளிட்டவைகள் என்று தீர்மானிக்கப்பட்டது.


No comments:

Post a Comment