அமெரிக்காவில் இந்திய மாணவர் ரவிதேஜா என்பவர் சுட்டுக்கொலை - MAKKAL NERAM

Breaking

Monday, January 20, 2025

அமெரிக்காவில் இந்திய மாணவர் ரவிதேஜா என்பவர் சுட்டுக்கொலை

 


ஆந்திராவின் ஐதராபாத்தில் உள்ள சைதன்யபுரியைச் சேர்ந்த கொய்யாடா ரவிதேஜா என்பவர் கடந்த 2022ம் ஆண்டு மேற்படிப்பிற்காக வாஷிங்டன் சென்றார். அங்கு படிப்பை முடித்த இவர், வேலைக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில், வாஷிங்டனில் உடலில் குண்டு காயங்களுடன் ரவிதேஜா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரை யாரேனும் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எதற்காக அவர் கொல்லப்பட்டார் என்ற விபரம் தெரிய வராத நிலையில், இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாஷிங்டனில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment