கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பிறந்த நாளை முன்னிட்டு சாரை,சாரையாக தொண்டர்கள் மாலை அணிவித்தும் கேக் வெட்டியும்,பட்டாசு வெடித்து அவரை நேரில் வாழ்த்தினர் - MAKKAL NERAM

Breaking

Thursday, January 16, 2025

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பிறந்த நாளை முன்னிட்டு சாரை,சாரையாக தொண்டர்கள் மாலை அணிவித்தும் கேக் வெட்டியும்,பட்டாசு வெடித்து அவரை நேரில் வாழ்த்தினர்


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன்  அவர்களின் பிறந்த நாளை  முன்னிட்டு கொள்ளூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தொண்டர்கள் சாரை,சாரையாக வந்து அவருக்கு நேரில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இதில், மாவட்ட நிர்வாகிகள் கதிரவன் ரமேஷ் ,பா.செ.குணசேகரன், லோகேஷ் வெற்றி ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன் கா.சு ஜெகதீசன் சோழவரம் செல்வசேகரன்பூண்டி சந்திரசேகர்,எல்லாபுரம் மூர்த்தி சக்திவேல்,ஜான் பொன்னுசாமி,நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் ,ஆரணி முத்து ,கும்மிடிப்பூண்டி அறிவழகன் மீஞ்சூர் தமிழ் உதயன் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர்,முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள் ராமஜெயம், விக்ரம், பொன்னேரி தீபன், சுதாகர் குமார்,மாவட்ட, ஒன்றிய,பேரூர்,கிளைக்கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,அரசு துறை அதிகாரிகள்,பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடும்பம் உறுப்பினர்கள்  அனைவரும் வரவேற்றனர்.




No comments:

Post a Comment