செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தினால் வெளிப்படையாக சொல்ல வேண்டும்..... தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை - MAKKAL NERAM

Breaking

Thursday, January 16, 2025

செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தினால் வெளிப்படையாக சொல்ல வேண்டும்..... தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை



 செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி பிரசாரம் செய்யும் போது, அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக, தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்தின் போது, கண்ணியம் மற்றும் நல்லொழுக்கத்தை பேணி காக்க வேண்டும்.படங்கள், வீடியோ, ஆடியோ மற்றும் பிற பிரசாரங்கள் செய்யும்போது, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கி இருந்தாலோ அல்லது திருத்தம் செய்திருந்தாலோ, அது பற்றிய குறிப்பை இடம்பெறச் செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏ.ஐ.,) தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தும் போது, அதை பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment