ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி சார்பில் போதைப் பொருள் தடுப்பு சங்கம் தலைக்கவசம் மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 28, 2025

ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி சார்பில் போதைப் பொருள் தடுப்பு சங்கம் தலைக்கவசம் மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் ரவுண்டான பகுதியில் ஈரோடு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தலைகவசம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு   , துண்டு பிரசுரங்கள் வழங்கியும், நடனம் ஆடியும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு பேரணி அந்தியூர் அரசு மருத்துவமனை கார்னர், சிங்கார வீதி, தேர் வீதி,பொரிக்கடை வழியாக ரவுண்டான பகுதி வந்தடைந்தது. மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இந் நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், அந்தியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, அந்தியூர் காவல் நிலைய காவல் உதவி - ஆய்வாளர்கள் கார்த்தி, செபஸ்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மெய்யழகன், முருகன், சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர் . 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment