தாம்பரத்தில் உள்ள டாடா ஏ.ஐ.ஏ. ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற முழக்கத்தை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி நடைப்பெற்றது.
பேரணியை தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி தலைவர் முகமது ஆரிப் மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இந்த பேரணியில் காப்பீடு திட்ட முகவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காப்பீட்டு திட்டத்தின் அவசியம் குறித்து கைகளில் பாதகை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.
இன்றைய காலத்தின் காப்பீடு அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியானது தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து சேலையூர் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் டாடா ஏ.ஐ.ஏ. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை டாடா ஏ.ஐ.ஏ. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தாம்பரம் கிளை தலைவர் தீலிபன் செய்திருந்தார்.
தொடர்ச்சியாக பொதுமக்களிடம் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment