திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா - MAKKAL NERAM

Breaking

Friday, January 10, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா


திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் மாக்கோலமிட்டு, பொங்கல் பானை வைத்து, பொங்கலை பொங்கி, உற்சாகமாகக் கொண்டாடினர்.மேலும், பணியாற்றக்கூடிய அனைத்து அதிகாரிகளும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அனைத்து துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் தனது மனம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment