சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் குடியரசு தின விழா - MAKKAL NERAM

Breaking

Monday, January 27, 2025

சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் குடியரசு தின விழா


ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் 76 வது குடியரசு தின விழாவிற்கு சத்தி அனைத்து வணிகர் சங்க துணை தலைவர் எஸ்.ஏ.ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். சத்தி அனைத்து வணிகர் சங்க பொருளாளர் ச.கி.நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். 


மேலும் இவ்விழாவில் சத்தி அனைத்து வணிகர் சங்க தலைவர் எஸ்.என்.ஜவஹர் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின சிறப்பு பற்றி வாழ்த்துரை வழங்கி ,  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். சத்தி அனைத்து வணிகர் சங்க துணை செயலாளர்கள் எஸ்.ராம்குமார் , கே.சசிக்குமார் , எஸ்.சதிஸ்குமார் மற்றும் உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க செயலாளர் எஸ்.ஏ.சேவியர் நன்றி கூறினார்.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment