மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும்..... ஐஐடி இயக்குனருக்கு கார்த்திக் சிதம்பரம் கண்டனம் - MAKKAL NERAM

Breaking

Sunday, January 19, 2025

மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும்..... ஐஐடி இயக்குனருக்கு கார்த்திக் சிதம்பரம் கண்டனம்

 


சென்னை மாம்பலத்தில் மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கோ பூஜையில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்றார்.

 இவர் அறிவியலுக்கு புறம்பாக கருத்து தெரிவித்ததாக கூறி அவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஐஐடி மெட்ராஸ் இயக்குனரை போலி அறிவியலை பரப்புவது பொருத்தமற்றது என்ற பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னதாக காம கோடி நிகழ்ச்சியில் பேசும்போது, ஒரு சன்னியாசியிடம் என்னுடைய தந்தை சென்று எனக்கு காய்ச்சல் என்று கூறினார். நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று அவர் கேட்க அதெல்லாம் வேண்டாம் பசுமாட்டு கோமியம் குடித்தால் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். அவர் சொன்னபடி மாட்டு கோமியத்தை குடித்த நிலையில் அடுத்த 15 நிமிடங்களில் காய்ச்சல் சரியாகிவிட்டது.

 கோமியம் என்பது பிணிகளை தீர்க்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மருந்து. உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் சக்தி கோமியத்தில் இருக்கிறது. எனவே கோமியத்தை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அவருடைய பேச்சுக்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment