கம்பம் மெட்டு மலைச்சாலையில் இருபுறங்களில் உள்ள குப்பை கழிவுகளை சுத்தப்படுத்திய கம்பம் மேற்கு வனச்சரக களப்பணியாளர்கள் - MAKKAL NERAM

Breaking

Friday, January 3, 2025

கம்பம் மெட்டு மலைச்சாலையில் இருபுறங்களில் உள்ள குப்பை கழிவுகளை சுத்தப்படுத்திய கம்பம் மேற்கு வனச்சரக களப்பணியாளர்கள்


தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட கம்பம் முதல் கம்பம் மெட்டு வரையுள்ள சாலையின் இரு பக்கமும் சபரிமலை ஐயப்ப பக்தர்களாலும், இதர வழிப்போக்கர்களாலும் தூக்கி வீசிவிட்டுச் சென்ற பிளாஸ்டிக் மட்டும் குப்பைகளை கம்பம் மேற்கு வனச்சரக களப்பணியாளர்கள் நான் கவர்மெண்ட் ஆர்கனைசேஷன் என் ஜி ஓ எஸ் பணியாளர்கள் இணைந்து புதுப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்களை கொண்டும் நல்ல முறையில் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு புதுப்பட்டி பேரூராட்சி சேர்மன் அவர்கள் வாகன வசதியும், துப்புரவு பணியாளர்களையும் ஒதுக்கீடு செய்து உதவியதற்கு கம்பம் வனச்சரக அலுவலர் சார்பாக நன்றி தெரிவித்து தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் வழியிலே பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும், வன உயிரினங்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்றும் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய செயல்களில் இந்த மலைச்சாலையில் ஈடுபட வேண்டாம் என்றும் துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு  வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரப்பட்டது.

No comments:

Post a Comment