இன்றைய ராசிபலன் 05-02-2025
மேஷம் ராசிபலன்
பணிவுடன் இருப்பது எல்லா நேரங்களிலும் உங்களுக்கு உதவாது. இது போன்ற விஷயங்களை நீங்கள் சொல்லும் போது, உங்களை விரும்பாதவர்களின் ஒத்துழைப்பைப் பெற முயற்சி செய்யுங்கள். அவர்களுக்குப் பிடித்தது போலப் பேசி, அவர்களது ஒத்துழைப்பைப் பெறலாம். வேலை விஷயங்களில் இன்று ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் யோசனைகள் விரைவில் அங்கீகரிக்கப்படும்! உங்கள் வாழ்க்கையில் உள்ள சில கெட்ட பழக்கங்களை நீங்கள் உண்மையில் நிறுத்தி விட விரும்புகிறீர்கள். அவற்றை நிறுத்தி விடுவது என்பது நீங்கள் நினைப்பதை விடக் கடினமாக இருக்கலாம். அதற்காக முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
இன்றைய நாளில் தாராள மனப்பான்மையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். முகத்தில் புன்னகையை மட்டும் வைத்துக் கொண்டு, முரட்டுத்தனமாகவும், இரக்கமற்ற மனிதராகவும் இருக்கக் கூடாது. நேர்மறை ஆற்றலுடன் இருப்பது இந்த நாள் முழுவதையும் நல்ல நாளாக மாற்ற உங்களுக்கு உதவும். இதன் மூலம் நிறைய நல்ல விஷயங்களால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, பயம் காரணமாக கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் பொருளாதார நிலைமை நிலையாக இருக்கிறது. ஆகையால், எதிர்காலத்திற்கான புதிய முயற்சிகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்குங்கள்.
மிதுனம் ராசிபலன்
உங்கள் மனதை ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபடுத்துங்கள். உங்கள் எண்ணங்களுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான திருப்பத்தைக் கொண்டுவரும். ஒரு புதிய பொழுது போக்கைச் செய்யத் தொடங்குங்கள். ஒரு தொழில் மாற்றம் தொட்டு விடும் தூரத்திலேயே உள்ளது. இத்தகைய மாற்றங்கள் குறித்து நம்பிக்கையுடன் இருங்கள். மாற்றம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் உங்களுக்கு உதவும். உங்கள் நாளை நேர்மறை ஆற்றலுடன் தொடங்க வேண்டும். நீங்கள் ஒரு தடுமாற்றத்தில் இருக்கிறீர்கள். இயற்கையின் மாற்றத்தால் நீங்கள் நிச்சயமாகப் பயனடையலாம். ஒரு விடுமுறை இப்போது உங்களுக்கு ஒரு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும்.
கடகம் ராசிபலன்
நீங்கள் ஒருதலை காதலில்சிக்கியுள்ளீர்கள்? அது உங்களை அதிகளவில் பாதிக்கிறதா? நீங்கள் மீண்டும்அதிலிருந்துமீள வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மனதிலேயே கேள்வி கேளுங்கள். அந்த குறிப்பிட்ட நபரை வெற்றி கொள்ள நீங்கள் எந்த அளவுக்கு முயல்வீர்கள்? நீங்கள் உங்கள் செயல்களை இருப்பதை விடஅதிகமாகக்காட்டுவதாகத்தோன்றுகிறது, அது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எந்த வரம்பையும் மீறாதீர்கள். கூர்மையான முனையின் மீது நடந்து செல்லாதீர்கள். உங்கள் ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்து வைத்து, உங்கள் செயல்களைக் கண்காணிக்கவும்.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் இன்று ஓர் செயல் நோக்கத்தோடு ஈர்க்கப்பட்டு, உற்சாகமாக இருக்கிறீர்கள். மேலும், இது உங்கள் படைப்பாக்கத் திறன்களைச் செயல்படுத்துவதற்கும் அட்டவணையினை சிறப்பாக அமைக்கவும் உதவும். கிரகங்களானது உங்களது நிதி, விலைமதிப்பற்ற சொத்துக்கள் மற்றும் கடவுள் கொடுத்த ஈவுகளில் சாதகமான பார்வையினைக் கொண்டுள்ளன. இன்று, நேர்மறை சிந்தனைகள் மிக அதிகமாக மேலோங்கி இருக்கும். எனவே, ஒவ்வொன்றையும் நுட்பத்தோடும், மிகக் கவனமாகவும், பயன்படுத்துங்கள். ஒரு வார்த்தையை உச்சரிப்பதற்கு முன்பு சிந்தியுங்கள். நீங்கள் உண்மைக்குப் புறம்பான சொற்களை ஒருமுறை உதிர்த்து விட்டால், அது மற்றொரு நபருக்கு நரக அனுபவத்தை கொடுத்துவிடும். எனவே, அதிலிருந்து விலகியே இருங்கள்!
கன்னி ராசிபலன்
சமீப காலமாக நீங்கள் மனச்சோர்வடைந்து உள்ளீர்கள். நீங்கள் முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை என உணர்கிறீர்கள். உங்களைப் பழைய படி மாற்றிக் கொள்ளச் சிறிது நேரம் தேவைப்படும். அது குறித்து நீங்கள் இன்று முடிவு செய்ய வேண்டும். முக்கிய விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். மெதுவாக, ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு செயல்படுத்துங்கள். பல விஷயங்கள் உங்களைப் பாதிக்கும். உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும். உங்களை மீண்டும் பழைய பாதைக்குக் கொண்டு வர உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெறுங்கள்.
துலாம் ராசிபலன்
இன்று, நீங்கள் ஏதாவது முயற்சிசெய்து சில சூழ்நிலைகளை சந்திக்க தைரியமாக இருங்கள். சிரமங்களை நிர்வகிக்க, உங்களுக்கு எவ்வொரு பதிலும் தேவையில்லை. கவனத்தோடு இருங்கள். நீங்கள் மனக்கசப்போடு இருந்த உங்களுடைய நலம்விரும்பி அல்லது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் இணக்கமாக இருங்கள். உங்கள் பிரதிநித்துவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். வெகு காலத்திற்கு முன்பே, நீங்கள் அதைத் பெற்றிருந்தற்காக பாராட்டப்படுவீர்கள்.
விருச்சிகம் ராசிபலன்
சமீபத்தில் ஏதேனும் சிந்தனைகள் உங்கள் மனதில் காலதாமதமாக தோன்றுகிறதா? புதிதாக ஏதாவது ஒன்றை புதியதாக செய்ய வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு மேலோங்குகிறதா? இப்போது இதைத் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். மேலும், அவைகள் சரியான நிலையில் கனகச்சிதமாக பொருந்துவதாகத் தோன்றும். புதிய தொடர்புகள் அமைய வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்களிடம் தான் உள்ளது. பிரபஞ்சத்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.
தனுசு ராசிபலன்
நீங்கள் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் உள்ளீர்கள். திடீரென, உங்களது நீண்ட நாளைய கனவுகள் மறைந்துவிட்டன. மேலும், பலவற்றைச் செய்து முடிக்க நீங்கள் ஆயத்தமாகிறீர்கள். நீங்கள் மீண்டும் ஒருபோதும் காலம் தாழ்த்த வேண்டாம். இருப்பினும், அந்த செயல்களை முடிந்தவரை விரைவாகச் செய்யுங்கள். நீங்கள் குறிக்கோள்களை வரையறுத்துள்ளீர்கள். மேலும், அதை நிறைவேற்ற உழைப்பதில் மகிழ்ச்சியடைகிறீர்கள். நீங்கள் அவசரகதியில் செய்யும் தெரிவுகளைத் தவிர்க்கவும். அப்படி அவசரகதியில் தெரிவு செய்யப்பட்டவை தான், பின்னர் உங்களை உறுதியாக வருத்தப்பட்டு புலம்ப வைத்துவிடும்.
மகரம் ராசிபலன்
இந்த நாள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. இதைப் போக்க அனுபவம் வாய்ந்தவர்களுடன் பேசுங்கள் அல்லது நண்பர்கள் மீது நம்பிக்கை வைப்பது உங்கள் கவலையைப் போக்க உதவும். உங்களது அளப்பரிய ஆற்றலை சில நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துங்கள். தியானம், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட உங்களுக்கு நல்ல உற்சாகத்தைத் தரும். சுறுசுறுப்பாக இருப்பது, உங்களைப் பற்றி நீங்களே நன்றாக உணர வைக்கும். வீட்டிலும், பணியிடத்திலும் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.
கும்பம் ராசிபலன்
சமீப காலமாக மனஅழுத்தத்தால்அவதிப்பட்டு வருகிறீர்கள். அதுஉங்களைப்பாதித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி, தொடர்ந்து நீங்கள் சிந்தித்து வருவது தான் உங்கள்கவலைக்குக்காரணம் ஆகும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி விடாமல்பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சமாக வேலை செய்தாலும், அதைச்சரியாகச்செய்யுங்கள். இது உங்கள் கவலை மற்றும் மனஅழுத்தத்தைக்குறைக்க உதவும். மனஅழுத்தத்திலிருந்துவிடுபடுவது என்பது உங்களது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில், மன அழுத்தம் சமீபத்தில் உங்கள்ஆரோக்கியத்தைப்பாதித்திருக்கிறது. உங்கள் மனஅழுத்தத்தைப்போக்க,தியானம் மற்றும் யோகாபோன்றவற்றைச் செய்ய வேண்டும்.
மீனம் ராசிபலன்
உங்கள் கடின உழைப்பு ஒருவரின் கவனத்தை ஈர்த்துள்ளது, அதற்காக உங்களுக்கு விரைவில் வெகுமதி கிடைக்கலாம். நீங்கள் ஒரு மாணவர் அல்லது தொழில்முறை பணியாளர் அல்லது வீட்டு வேலையைச் செய்யும் அம்மாவாகவும் இருக்கலாம், உங்களது வருவாய் விரைவில் உயர உள்ளது. உங்கள் வாழ்க்கையில் சிறிய அளவிலான எதிர்மறை எண்ணங்கள் உள்ளது. உங்களை விமர்சிக்கும் நபர்களிடமிருந்து, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல், அவர்களது நட்பைத் துண்டிக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ உங்களைக் காயப்படுத்தியவர்களுடன் சமாதானமாக நடந்து கொள்ளுங்கள்.
No comments