மக்கள் நேரம் செய்தி எதிரொலி; துரித நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை
கடந்த 22.01.2025 அன்று செங்கோட்டை - குற்றாலம் பிரதான சாலை முழுவதுமாக சேதமடைந்துள்ள செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டு 'விபத்து ஏற்படுத்தும் சாலை, விடியல் அரசு விமோசனம் தருமா?' என்று கேள்வி எழுப்பியிருந்தோம்.
நான்கு ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருந்த சாலையை நமது செய்தி வெளியாகி வெறும் இரண்டு வாரங்களே ஆன நிலையில் தகவல் அறிந்ததும் நிர்வாகம் உடனடியாக செயலில் இறங்கி மேற்படி சாலையை செப்பனிடும் பணியை துவங்கி விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்ததோடு நமது ஊடகத்திற்கும் செய்தியாளருக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
No comments