திருவள்ளூர்: பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் அடிக்கல் நாட்டினர் - MAKKAL NERAM

Breaking

Saturday, February 1, 2025

திருவள்ளூர்: பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் அடிக்கல் நாட்டினர்


திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த பசியாவரம் மீனவ கிராமத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் குடிப்பதற்கு உவர்ப்பு நீரையே பருகி வந்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ரூ 10 இலட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கினார். 


அதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்படும் நிலையில் பூமி பூஜை செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கிராமத்திற்கு நேரில் சென்று நிலையம் கட்டப்படும் இடத்தில் அடிக்கல் நாட்டினார். 

மேலும் பணிகளை கோடை வெயில் துவங்குவதற்கு முன்பாக விரைவில் முடித்து தர வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பசியாவரம் சேகர்,கோட்டைக்குப்பம் ஜெயராமன்,ஜெயசீலன்,ஆண்டி குப்பம் சஞ்சய் காந்தி, திமுக நிர்வாகி காசி,திருப்பாலைவனம் கங்கை அமரன் மற்றும் பசியாவரம் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment