சாலை ஓரத்தில் கிடந்த எலும்புக்கூடுகள்..... போலீசார் விசாரணை - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 5, 2025

சாலை ஓரத்தில் கிடந்த எலும்புக்கூடுகள்..... போலீசார் விசாரணை

 


கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்ச குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த போது மனித எலும்புக்கூடுகள், மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம் போன்றவை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் இதனை பார்த்து பயத்துடன் சென்றுள்ளனர். 

இது குறித்து தகவலறிந்த கடலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டு விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பின்னர் சாலை ஓரத்தில் உள்ள வணிக வளாகம் பகுதியில் மந்திரிக்கப்பட்ட எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்ததால் யாருக்கும் சூனியம் வைக்கப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment