• Breaking News

    நாகை: கிராமப்புறங்களில் நீடிக்கும் பனி மூட்டத்தால் பனிப் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கும் வயல்வெளிகள்


    நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிக அளவு பனிமூட்டம் காணப்படுகிறது.குறிப்பாக இரவு 7மணி முதல் காலை 8 மணி வரை நீடிக்கும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களை ஒப்பிடும்போது இன்று பனிமூட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது.

    குறிப்பாக திருக்குவளை, வலிவலம், கொடியாலத்தூர், ஆதமங்கலம், கோயில்கண்ணாப்பூர், ஆந்தகுடி, சிகார்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வெண்போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்து வருகிறது.அதுமட்டுமின்றி சிறுச்செடிகள் கொடிகள் மற்றும் பூக்களில் பனித்துளிகள் படர்ந்து காணப்படுகிறது.



    No comments