நாகை - இலங்கை இடையே மீண்டும் இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 12, 2025

நாகை - இலங்கை இடையே மீண்டும் இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

 


நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இந்த கப்பல் வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment