பழனியில் அதிகாலையில் தீ விபத்து - MAKKAL NERAM

Breaking

Friday, February 7, 2025

பழனியில் அதிகாலையில் தீ விபத்து



திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பழனி திருஆவினன்குடி கோவில் எதிரே உள்ள சன்னதி வீதியில் உள்ள பூஜை சாமான் விற்பனை செய்யும் கடைகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment