காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவி மீது ஆத்திரத்தில் 19 வயது வாலிபர் கொடூர தாக்குதல் - MAKKAL NERAM

Breaking

Thursday, March 27, 2025

காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவி மீது ஆத்திரத்தில் 19 வயது வாலிபர் கொடூர தாக்குதல்


 சென்னை கொளத்தூர் பகுதியில் சந்தோஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் சந்தோஷின் நடவடிக்கைகள் சரியில்லாததால் மாணவி அவரிடம் பழகுவதை தவிர்த்தார். அந்த மாணவியிடம் சந்தோஷ் மீண்டும் தன்னிடம் பழகுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் கோபத்தில் சந்தோஷ் அவரை அடித்து தாக்கினார். அந்த மாணவியை அவர் சரமாரியாக அடித்து விட்டு தப்பி ஓடிய நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொளத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷை வலைவீசி தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment