தென்காசியில் நாடார் உறவின் முறை கூட்டமைப்பு சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம் - MAKKAL NERAM

Breaking

Thursday, March 27, 2025

தென்காசியில் நாடார் உறவின் முறை கூட்டமைப்பு சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்


தென்காசியில் நாடார் உறவின் முறை கூட்டமைப்பு சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாடார்  உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான இலவச போட்டித் தேர்வு மையம் தொடங்க உள்ளது. அதன் முதல் முயற்சியாக மே மாதம் 4ந்தேதி நீட் தேர்வு எழுதவுள்ள  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் பள்ளியில் வைத்து இலவச நீட் பயிற்சி வகுப்புகள்; தொடங்கப்பட்டது.

இப்பயிற்சி  வகுப்புகள் துவக்க விழாவிற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை வகித்தார். யுஎஸ்பி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் அந்தோணி பால்ராஜ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.இப்பயிற்சி வகுப்புகள்  நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும்  சுப்பிரமணியன் குருசாமி நாடார்  ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment