• Breaking News

    அதிக சத்தத்துடன் DJ.... கலவரத்தில் முடிந்த ஹோலி பண்டிகை....

     


    ஜார்கண்ட் மாநிலத்தில் கிருதிப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கோத்தம்பா பகுதிக்கு ஒரு குழு ஹோலி ஊர்வலத்தை எடுத்துச் சென்றது. அப்போது ஊர்வலத்தில் சிலர் தடங்கல்  ஏற்படுத்த முயன்றதாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசியும் அருகில் உள்ள வாகனங்களைத் தீ வைத்தும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறை படை மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தகராறில் குற்றவாளிகள் தீவிரமாக தேடி வருவதாகவும் அடையாளம் காணப்பட்ட உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை பிரிவு காவல் அதிகாரி ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இதேபோன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவிலும் ஹோலி கொண்டாட்டத்தின் போது DJ  இசை அதிக அளவில் சத்தமாக வைத்ததால் இரு சமுதாயத்திற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கல்லெரியாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கியுள்ளனர்.

    இதில் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கலவரத்தை கட்டுப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments