கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய உழவர் செயலி குறித்த செயல்முறை விளக்கம்
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கீழ்வேளூரைச் சேர்ந்த மாணவர்கள் ஜெயமுருகன் மற்றும் சக மாணவர்கள் (பாலாஜி ஷங்கர், சந்துரு, ஹரிகிஷோர், சையத் பஷீர்,தரீஷ்,யோக சீனிவாசன்) நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் "உழவர் செயலி" பற்றிய விளக்கம் வழங்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு செயலியின் பயன்பாடு, அம்சங்கள், மற்றும் உள்நுழையும் முறைகள் குறித்து கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவர்கள் செயலியின் செயல்பாட்டை நேரடியாக விளக்கினர். இதன் மூலம் சந்தை விலை நிலவரங்களை அறிந்து பயனுள்ளதாக பயன்படுத்தலாம். மேலும், விதைகள், உரங்கள், பருவநிலை முன்னறிவிப்பு, மற்றும் அரசின் விவசாய உதவிகளை பெறலாம்.
விவசாயிகள் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP மூலம் செயலியில் உள்நுழையலாம். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் செயலியின் பயன்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
No comments