தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை..... அண்ணாமலை திட்டவட்டம் - MAKKAL NERAM

Breaking

Friday, April 4, 2025

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை..... அண்ணாமலை திட்டவட்டம்


 தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் சந்தித்தார். அப்போது பாஜக உடன் கூட்டணி அமைக்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் நிபந்தனைகள் வைக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவது உறுதி என்ற தகவல் வெளியானது. அதோடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment