தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, May 31, 2025

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

 


தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தென்காசி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment